நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி... 17 வயது சிறுமியிடம் வரம்பு மீறிய நடிகர்

Report Print Vijay Amburore in இந்தியா

நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை காட்டி 17 வயது சிறுமியை அரைநிர்வாணமாக புகைப்படம் எடுத்த மராட்டிய நடிகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நடிகரும், இயக்குனருமான மந்தர் குல்கர்னி, நடிகர்களை உருவாக்குவதற்காக தனியாக நாடக வொர்க்ஷாப் ஒன்றினை நடத்தி வருகிறார்.

அங்கு நடிப்பு கற்றுக்கொள்வதற்காக 17 வயது சிறுமி சேர்ந்துள்ளார். நாடகத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை காட்டிய மந்தர், அதற்காக சில புகைப்படங்கள் எடுக்க வேண்டும் எனக்கூறி 16ம் திகதியன்று வீட்டிற்கு தனியாக வருமாறு அழைத்துள்ளார்.

அதனை நம்பி சென்ற சிறுமிக்கு பல்வேறு ஆடைகளை கொடுத்து அணிந்து வருமாறு கூறியுள்ளார். அவர் கொடுத்த அனைத்து ஆடைகளையும் அணிந்து சிறுமியும் புகைப்படம் எடுத்துள்ளார்.

இறுதியில் பிகினி உடையில் வருமாறு அந்த சிறுமியிடம் குல்கர்னி கூறியுள்ளார். அந்த ஆடையினையும் சிறுமி அணிந்து வந்த போது அதன் அளவை எடுத்துக்கொண்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய சிறுமி, அங்கு நடந்த அனைத்தையும் தன்னுடைய அம்மாவிடம் கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவருடைய அம்மா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் 22ம் திகதியன்று மந்தர் குல்கர்னியை கைது செய்தனர். இந்த சம்பவமானது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்