அருகிலிருந்து அவளை பார்ப்பது பிடிக்கும்.. அழுகிய நிலையில் வீட்டில் கிடந்த மனைவி.. கணவன் குறித்த கண்ணீர் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் படுத்தபடுக்கையாக இருந்து உயிரிழந்த மனைவியோடு வாழ்ந்து வந்த கணவரின் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

கொட்டிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 11 ஆண்டுகளாக வசித்து வருபவர் ராஜகோபால் (75).

இவர் மனைவி கல்யாணி. தம்பதிக்கு ஒரு மகள் இருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

இந்த சூழலில் அக்கபக்கத்தில் உள்ள யாரிடமும் ராஜகோபால் ஒரு வார்த்தை கூட பேசாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என இருந்து வந்தார்.

இந்நிலையில் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையான கல்யாணி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து மனைவி கை கால்கள் அசையாமல் இருந்ததால் அதிர்ச்சியடைந்த ராஜகோபால் முதல்முறையாக அருகில் வசித்த நபர்களிடம் உதவி கோரினார்.

அவர்கள் வீட்டுக்குள் வந்து பார்த்த போது கல்யாணியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் அருகில் சிறுநீர், மலம் இருந்தது.

பின்னர் உறவுகள் அறக்கட்டளையை சேர்ந்த நபர்கள் வந்து கல்யாணியின் சடலத்தை மீட்டனர்.

இதனிடையில் ராஜகோபாலுக்கு லட்சக்கணக்கில் பணம் கைவசம் இருந்தும் நிம்மதியில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் என தெரியவந்துள்ளது.

அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மகிழ்ச்சியுடன் வசித்த ராஜகோபாலை அவர் மகளின் இறப்பு உலுக்கியுள்ளது.

இதோடு வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களும் அவர் மனதை பாதித்தது.

மனைவியின் அருகில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்தபடி கல்யாணியைப் பார்ப்பது மட்டுமே ராஜகோபாலுக்குப் பிடித்த விடயம்.

படுத்த படுக்கையாக உள்ள மனைவி உயிரோடு இருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ள அவரின் கால்களை அழுத்திப் பிடிப்பார்.

இந்தச் சமயத்தில் நேற்றுமுன்தினம் கல்யாணியின் கால்களை ராஜகோபால் பிடித்து அழுத்தியும் எந்தவித அசைவும் இல்லை. இதனால்தான் பக்கத்து வீட்டாரின் உதவியை அவர் நாடியுள்ளார்.

மருத்துவமனை பிணவறையில் இருந்து கல்யாணி சடலம் ராஜகோபாலிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, மனைவியின் முகத்தைப் பார்த்தபடி அமைதியாக இருந்துள்ளார்.

இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ராஜகோபால், கல்யாணி ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.

இரவில் கல்யாணியின் சடலம் தகனம் செய்ய மயானத்தில் ஏற்பாடுகள் நடந்தன.

அப்போது, கல்யாணியின் முகத்தைப் பார்த்த ராஜகோபால், ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்ற பாடலைப் பாடினார்.

அதைக் கேட்டவர்களின் கண்கள் குளமானது. அவர் உறவினர்கள் கூறுகையில், ராஜகோபால் எப்போதாவது இமெயிலில் தகவல்களை அனுப்புவார்.

ஆனால், அதற்குப் பதில் அனுப்பினால் அடுத்த மெயில் வராது என்றனர்.

ராஜகோபால் வசித்த வீடு, சுத்தம் செய்யாமல் தூசிகள் படிந்து குப்பைக் காடாகக் காட்சியளித்தது. கல்யாணியைச் சுற்றி சேலைகள் குவிந்து கிடந்தன.

மேலும் அந்த அறையின் தூர்நாற்றம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வீசாமலிருக்க பினாயிலைக் ராஜகோபால் கொட்டி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

மனைவியின் இறப்புக்கு பின்னர் தங்கள் வீட்டுக்கு ராஜகோபலை உறவினர்கள் அழைத்த நிலையில் அவர் போக மறுத்து மனைவி இருந்த வீட்டுக்கே வந்துவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...