இரவில் ரயிலில் பயணித்த பள்ளி மாணவி.. விளக்குகள் அணைக்கப்பட்ட பின்னர் நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

ஓடும் ரயிலில் தூங்கி கொண்டிருந்த மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி 11-ம் வகுப்பு படிக்கிறார்.

இவர் தன் குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டு, கடந்த 2016, ஜூலை மாதம் 11-ந் திகதி இரவு ரயிலில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

ரயிலில் சிறுமி படுத்திருந்த மேல் படுக்கைக்கு கீழுள்ள படுக்கையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த கோலாம் மோர்ட்டோஜா (21) என்ற இளைஞர் படுத்திருந்தார்.

இரவில் ரயில் பெட்டியில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டான நிலையில் இருக்கையின் ஓரத்தின் வழியாக கையை விட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார் கோலாம் .

பயந்து போன சிறுமி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனது சீண்டலை அவர் தொடர்ந்தார்.

அதனால் அந்த மாணவி பொலிசில் புகாரளித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட கோலாம் மீது கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது வந்தது.

இதன் தீர்ப்பை நீதிபதி ராதிகா நேற்று வாசித்தார். அதில், கோலாமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்