ராணி மாதிரி பார்த்துக்கிறேன்... இளம் விதவைப் பெண்ணிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்த அதிகாரி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவனை இழந்து வறுமையில் வாடும் இளம் பெண் ஒருவர், வருவாய் ஆய்வாளரிடம் விதவை சான்றிதழ் கேட்ட நிலையில், அவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கணவரை இழந்து கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

இதனால் தன்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, விதவை சான்றிதழ் வாங்குவதற்காக சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமாரிடம் மனுக் கொடுத்துள்ளார்.

அதன் பின் அந்த பெண்ணிற்கு சான்றிதழ் வழங்காமல், காலம் தாழ்த்தி வந்த வருவாய் ஆய்வாளர், குறித்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

குறிப்பாக இரவு நேரங்களில் போன் செய்து, ஆபாசமாக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் உனக்கு விதவை சான்றிதழ் எல்லாம் வேண்டாம், என்னோடு வா, நான் உன்னை ராணி மாதிரி பார்த்து கொள்கிறேன் என்று எல்லை மீறி பேசியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து தன்னுடைய உறவினர்களிடம் இது குறித்து கூறி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்று அவரிடம் வாக்கு வாதம் செய்துள்ளனர்.

அப்போது, அவரோ அதிகார தோரணையுடன் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற இளம் பெண்ணின் உறவினர்கள், அலுவலகத்தைவிட்டு அவரைத் தரதரவென வெளியே இழுத்துவந்து அடித்து உதைத்துள்ளனர்.

இந்த தகவல் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை ஏற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ஆர்.ஜ ஜெயக்குமாரை இடைநீக்கம் செய்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கூறுகையில், வருவாய் ஆய்வாளர் மீது தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers