தமிழர்கள் 7 பேர் முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்... நளினி தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Santhan in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தங்களை முன் கூட்டியே விடுவிக்க கோரிய நளினியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து நளினி உள்ளிட்ட 7 பேரை முன் கூட்டிய விடுவிக்க வேண்டும் என்று தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் 7 பேர் சார்பாகவும் நளினி தரப்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதாவது ஏற்கனவே தூக்கிதண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் , ஆயிரக்கணக்கான கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரைக்கும் எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டு இல்லாத போது, தங்களை முன் கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் அரசு கேட்க வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என்றும் 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரீசிலனையில் உள்ளதாகவும் அரசுதரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,

இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்