இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளில் சொத்துக்களை குவித்த சிதம்பரம்: ஆதாரங்களை சமர்ப்பித்தது அமலாக்கத்துறை

Report Print Basu in இந்தியா

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இலங்கை, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளில் சொத்துக்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

ஆகத்து 26 திங்கட்கிழமை ஐ.என்.எக்ஸ் ஊடக வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில், அமலாக்கத்துறை அவரது வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

நிதி புலனாய்வு பிரிவு குறிப்பிட்ட உள்ளீடுகளுடன் அமலாக்கத்துறை பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், சிதம்பரம் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, பிரான்ஸ், கிரீஸ், மலேசியா, மொனாக்கோ, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் இலங்கையில் வங்கி கணக்குகள் மற்றும் மதிப்புமிக்க சொத்துக்கள் இருக்கின்றன என்பதை பிரமாண பத்திரம் வெளிப்படுத்துகிறது.

சிதம்பரமும் அவரது நெருங்கிய நம்பிக்கையாளர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல நிறுவனங்களை உருவாக்கியுள்ளனர். இதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறினார்.

INX Media case: Setback for Chidambaram as plea against arrest not listed in SC

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிதம்பரம் வாங்கிய 17 மதிப்புமிக்க வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் 10 விலையுயர்ந்த சொத்துக்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவைக் கருத்தில் கொள்வது நீதியைக் கேலி செய்யும் என்று கூறிய புலனாய்வு அமைப்பு, வழக்கில் அவர் அதிகாரிகளுடன் பொறுப்புடன் ஒத்துழைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ஊழல் விசாரணையில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட சிதம்பரம், அவரது சிபிஐ காவலில் மற்றும் அவரை கைது செய்வதற்கான வாரண்ட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை பட்டியலில் இல்லை என தெரியவந்துள்ளது. இது சிதம்பரத்திற்கு ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சிபிஐ கைதுக்கு எதிரான சிதம்பரத்தின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ ஏற்கனவே கைது செய்துவிட்டதால் வழக்கு காலவதியாவிட்டது என குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்