ரகசியத்தை கண்டுபிடித்த கணவன்.. அவரை கொன்று புதைத்த மனைவி.. திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

கணவரை காதலனோடு சேர்ந்து கொன்று புதைத்த வழக்கில் மனைவி உள்ளிட்ட மூவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அத்திகானூரை சேர்ந்தவர் சஞ்சீவன் (38). ஜவுளி வியாபாரி.

இவரது மனைவி அனிதா தேவி(33). வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (28). அதேபோல, கரூர் மாவட்டத்தின் சீத்தப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (28).

ஜெயபிரகாஷ், சங்கர் ஆகிய இருவரும் அனிதா தேவியின் அண்ணனின் நண்பர்கள்.

சஞ்சீவன் பெரும்பாலும் வியாபாரத்துக்காக வெளியூர் சென்ற நிலையில் ஜெயபிரகாசிற்கும், அனிதா தேவிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி ரகசியாக சந்தித்து வந்ததை சஞ்சீவன் கண்டுபிடித்துள்ளார். இதனால், சஞ்சீவனை கொலை செய்ய அனிதா தேவியும், ஜெயபிரகாசும் திட்டமிட்டனர்.

அதன்படி, கடந்த 31.10.2011 அன்று சஞ்சீவனை தலையணையால் அழுத்தியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.

இதற்கு சங்கர் உடந்தையாக இருந்துள்ளார். மூவரும் சேர்ந்து சஞ்சீவனின் சடலத்தை ஏரியில் குழித் தோண்டி புதைத்துள்ளனர்.

இந்நிலையில், ஏரியில் புதைக்கப்பட்ட சடலத்தின் பாகங்கள் வெளியே தெரிந்ததை அடுத்து பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அனிதா தேவி, ஜெயபிரகாஷ், சங்கர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், குற்றவாளிகள் அனிதா தேவி, ஜெயபிரகாஷ், சங்கர் ஆகியோருக்கு கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், கூட்டுச் சதிக்காக ஆயுள் தண்டனையும், தடயங்களை மறைத்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இதோடு தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers