விமானம் புறப்படும் நேரத்தில் இளைஞர் செய்த விபரீதம்... என்ன செய்தார் தெரியுமா? திடுக்கிடும் வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் விமான புறப்பட தயாராக இருந்த போது, திடீரென்று இளைஞர் ஒருவர் ஓடுபாதையில் விமானத்தை நோக்கி நடந்து வந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

SpiceJet நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மும்பையிலிருந்து பெங்களூருக்கு புறப்படுவதற்காக பயனிகளுடன் தயாராக இருந்தது.

அப்போது தீடீரென்று அங்கிருந்த அனைத்த பாதுகாப்புகளையும் மீறி திடீரென்று இளைஞர் ஒருவர், விமானத்தின் ஓடுபாதையில் விமானத்தை நோக்கி வந்தார். இதைக் கண்ட விமானி சாதூர்யமாக விமானத்தின் இன்ஜினை நிறுத்தியதால், அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானதால், பலரும் இத்தனை பாதுகாப்புகளை மீறி எப்படி வர முடிந்தது? விமானநிலைய சிறப்பு படை என்ன செய்து கொண்டிருந்தது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் எனவும், அவரின் பெயர் Kamran Shaikh என்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்