தடுமாறும் இந்திய பொருளாதார நிலை: விளக்கமளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் பேசிய அவர், உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 சதவீதமாக உள்ளது. இந்தியா மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் உள்நாட்டு மக்களின் நுகர்வு குறைந்துள்ளது.

பொருளாதார நிலையில் எஞ்சிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா நல்ல நிலையில் உள்ளது.

வரி, தொழிலாளர் சட்டங்களில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொழில்துறை வளர்ச்சிக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

பொருளாதார சீர்த்திருத்தம் தொடர்ந்து நடைபெறக்கூடியது. பொருளாதார மாற்றங்களை அரசு கண்காணித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொழில் தொடங்க சுற்றுச்சூழல் அனுமதி விரைவாக வழங்கப்படுகிறது. தொழிலாளர் நல சட்டங்களை மீறுவோருக்கு கடும் தண்டனைக்கு பதில் அபராதம் விதிக்க சட்டத்திருத்தம்.

கம்பெனி சட்டப்படி தொடரப்பட்ட 14000 வழக்குகள் திரும்ப பெறப்பட்டு உள்ளன. வேலைவாய்ப்பு உருவாக்கும் கம்பெனிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை.

வருமானவரி செலுத்துவோர் துன்புறுத்தப்படுவது இல்லை. ஜிஎஸ்டி வரி குறைப்பு, வரி சீர்த்திருத்தத்தால் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.

முக்கிய அம்சங்கள்:

 • பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கப்படும்
 • முதலீட்டாளர்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சார்சார்ஜ் வரி நீக்கம்
 • தொழில் கடனை அடைத்தவர்களுக்கு 15 நாட்களில் வங்கிகள் ஆவணங்களை திருப்பி தர வேண்டும்
 • வீட்டுக்கடன், வாகனக் கடன் வட்டி விகிதம் குறைப்பு
 • சிறு, குறு நிறுவனங்கள் எளிதில் தொழில் தொடங்க நடவடிக்கை
 • பல்வேறு துறைகளில் சீர்த்திருத்தத்துக்கு அரசு முன்னுரிமை
 • கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 60 நாளில் திரும்ப அளிக்கப்படும்
 • தொழில் தொடங்குவோருக்கான வரி விதிப்பு நீக்கப்படும்
 • வருமான வரித்துறை நோட்டீசுக்கு 3 மாதத்தில் தீர்வு காண நடவடிக்கை
 • வருமான வரித்துறை தொடர்பான நோட்டீஸ், சம்மன் உள்ளிட்ட நடவடிக்கைகள் அக்டோபர் 1 முதல் ஒருங்கிணைக்கப்படும்
 • வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
 • நிறுவனங்களின் சமூக சேவையில் குறைபாடுகளுக்காக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது
 • புதிய தொழில் தொடங்குவோருக்கு உதவ தனி பிரிவு உருவாக்கப்படும்
 • அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணி முடிந்த உடன் நிதி வழங்க நடவடிக்கை
 • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 30 நாளில் அளிக்கப்படும்
 • தனியார் நிதி நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி
 • வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும்
 • பி.எஸ் 4 வாகனங்கள் 2020 மார்ச் மாதத்திற்கு பிறகும் இயங்க அனுமதிக்கப்படும்
 • அரசுத்துறைகள் புதிய கார்கள் வாங்க உள்ள தடை விலக்கப்படுகிறது
 • பழைய வாகனங்களை ஒழிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது
 • பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்குவது தொடர்பாக விரைவில் கொள்கை அறிவிக்கப்படும்
 • ஒருமுறை பதிவு கட்டண நடைமுறை 2020ம் ஆண்டு வரை ஒத்திவைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்