பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய குடும்பத்தார்... அவள் எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பள்ளி மாணவிக்கு திருமணம் செய்ய குடும்பத்தார் ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள சிறுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் - பெரியம்மாள் தம்பதியரின் மகள் சரண்யா.

இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சரண்யா வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்ததாகவும்,உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள் சரண்யாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சரண்யாவின் தாய் பெரியம்மாள் காவல் நிலையத்தில் தனது மகள் வயிற்றுவலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறியுள்ளார்.

ஆனால் பொலிஸ் விசாரணையில் வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவின் தந்தை இறந்துவிட்ட நிலையில் சரண்யாவின் அண்ணன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.

அவர் செல்வதற்குள் சரண்யாவிற்கு திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதில் விருப்பமில்லாத சரண்யா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்