தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு

Report Print Basu in இந்தியா

கோவையில் ஊடுருவியதாக கூறப்படும் தீவிரவாதியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை வழியாக ஆறு தீவிரவாதிகள் கோவையில் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. உளவுத்துறை எச்சரித்த நிலையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும், அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மூன்று வாகனங்களின் எண்கள் வெளியாகியுள்ளது, Innova வாகனத்தின் எண்: TN 70 A 7779, Swift TN 02 Q 7756, Xylo TN 99 Q 5260.

பயங்கரவாதிகள் அனைவரும் இந்துக்களை போன்று உருமாறி கோவையில் உலாவி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து கோவையில் உள்ள ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் கோயில்கள் என காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி என தமிழகம் முழுவதும் தீவிர சோதனை முடிக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீவிரவாதிகள் என்று சந்தேகிப்போரின் புகைப்படம் ஏதும் வெளியிடப்படவில்லை என டி.ஜி.பி திரிபாதி மற்றும் கோவை காவல் ஆணையர் சுமித் விளக்கமளித்துள்ளனர்.

ஆனால், தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை வந்ததை உறுதி செய்த கோவை காவல் ஆணையர் சுமித், பொலிசார் சோதனையால் பொதுமக்கள் அச்சப்பட தேலையில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்