கல்லூரி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்ற இளைஞன்... அதன் பின் நடந்த சம்பவத்தின் பின்னணி

Report Print Santhan in இந்தியா
530Shares

தமிழகத்தில் கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, அவருடன் நெருக்கமாக இருந்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவினையின் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், இரண்டாம் ஆண்டு கல்லூரி பயின்று வருகிறார்.

இவர் கடந்த மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட உறவுக்கார பெண்ணுடன் தங்கி அவரை கவனித்து வந்தார்.

அப்போது மருத்துவமனையில் கொல்லம் பகுதியை சேர்ந்த அனீஷ் என்ற இளைஞனுடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

இதனை சாதகமாக்கிக் கொண்ட அந்த இளைஞன், கடந்த 4-ஆம் திகதி மாணவியிடம் திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அதன் பிறகு மாணவி திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய போது, திருமணம் செய்ய மறுத்த இளைஞன், மாணவியுடன் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

இதையடுத்து இது குறித்து மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், பொலிசார் இளைஞனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்