மகள் வருவதில் தாமதம்! பரோலை நீட்டிக்க நளினி மனு அளிக்கவுள்ளதாக தகவல்

Report Print Kavitha in இந்தியா

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வந்துள்ளார்.

தற்போது வேலூர் சத்துவாச்சாரி புலவர் நகரில் திராவிட இயக்க தமிழர் பேரவை பிரமுகர் வீட்டில் தங்கி இருக்கும் நளினி, சத்துவாச்சாரி பொலிஸ் நிலையத்தில் சிறைத்துறை விதிமுறைகளின்படி தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை சந்தித்த நளினி மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து சத்துவாச்சாரியில் நளினியுடன் தங்கியுள்ள அவரது தாயாரான பத்மா “எனது மகள் நளினி 28 ஆண்டுகளுக்கு பிறகு, பேத்தி ஹரித்ராவின் திருமண எற்பாடுகள் செய்ய ஒருமாதம் பரோலில் வந்துள்ளார்.

லண்டனில் உள்ள பேத்தி ஹரித்ராவுக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு முடிந்த பிறகு தான் தமிழகத்திற்கு வர உள்ளார்.

இதுவரை பேத்திக்கு மணமகனாக 4 பேரை பார்த்து வைத்துள்ளோம். பேத்தி ஹரித்ராவிடம் காண்பித்து மணமகன் இறுதி செய்யப்பட உள்ளார்.

இதற்கிடையே நளினிக்கு ஒருமாதம் பரோல் முடிவடைய உள்ளதால் மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிக்க கோரி நளினி தரப்பில் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

பரோல் நீட்டிப்பது தொடர்பாக நீதிமன்றமே முடிவெடுக்க முடியும் என்றும், சிறைத்துறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers