தற்கொலை செய்து கொண்ட பெண்.. சடலத்தை யாரையும் தொடவிடாமல் பாதுகாத்த நாய்... கண்ணீர் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் சடலத்தை யாரையும் தொட விடாமல் வளர்ப்பு நாய் பாதுகாத்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் தனசேகர் (40). வாட்டர் கேன் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ராதா (34). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

தனசேகர் தொழில் காரணமாக பல இடங்களில் கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி கொடுக்க முடியாமல் திணறினார்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனசேகர் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு திடீரென தலைமறைவானார்.

இதனால் கடன் கொடுத்தவர்கள் ராதாவிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த ராதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ராதாவின் உடலை மீட்க முயன்றனர். அப்போது ராதா பாசமாக வளர்த்த நாய் ராதாவின் சடலத்தை எடுக்கவிடாமல் சடலத்தின் மீது படுத்து கண்ணீர் வடிந்தபடி பொலிசாரை பார்த்து குரைத்தது.

பின்னர் ஒரு வழியாக நாயை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பொலிசார் சடலத்தை மீட்டனர்.

எஜமானர் இறந்துவிட்டதை அறிந்த நாய் சடலத்தை எடுக்கவிடாமல் செய்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்