மார்பு பகுதியில் பலத்த அடி! கணவரை பிரிந்து இளைஞருடன் வாழ்ந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் உள்ள விடுதியில் திருமணமான இளம்பெண்ணை கொலை செய்த அவரின் காதலன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை பெரியமேட்டில் உள்ள விடுதியில் இளம்பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பான விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், இறந்த பெண்ணின் பெயர் மோகனா.

ரயில்வேயில் பணிபுரியும் மோகனாவுக்கு திருமணமாகி விட்ட நிலையில் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த அவருக்கு திருமணமாகாத வீராசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடிக்கடி விடுதியில் தங்கியுள்ளனர்.

அப்படி தான் சம்பவத்தன்று விடுதியில் தங்கிய போது வீராசாமி மோகனாவை கொடூரமாக அடித்து கொன்றார்.

இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் எங்களிடம் அளித்த வாக்குமூலத்தில், மோகனாவுக்கு மாதம் ரூ 45 ஆயிரம் சம்பளம் என்ற நிலையில் நான் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்தார்.

அவர் எனக்கு ஒரு ஏ.டி.எம்மாக இருந்தார், நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்குள் சில கசப்பான சம்பவங்கள் எங்கள் இருவருக்குள் நடந்தது.

இதனால் மோகனாவிடம் பேசுவதைத் தவிர்த்தேன். ஆனால், அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து அவரை ஏற்றுக்கொண்டேன்.

இந்தச் சூழ்நிலையில் மோகனாவிடம், என்னைத் தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது என்று கூறியும் அவர் கேட்கவில்லை.

விடுதியில் நாங்கள் இருவரும் தங்கியிருந்தபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

போதையில் இருந்த நான் அவரை சரமாரியாகத் தாக்கிய நிலையில் கீழே விழுந்த அவர் இறந்துவிட்டதாகக் கருதினேன்.

கொலையை மறைக்க மோகனா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது போல மின்விசியில் சடலத்தை தொங்கவிட்டேன் என கூறியதாக தெரிவித்துள்ளனர்.

மோகனாவின் பிரேத பரிசோதனையில் அவர் மார்பு பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால், எலும்பு உடைந்தது தெரியவந்துள்ளது.

மேலும் தன்னை விட்டு மோகனா பிரிய நினைத்ததாகவும் அப்படி செய்தால் இனி தனக்கு பணம் கிடைக்காது என்ற நிலையில் அவரை கொலை செய்ததாகவும் வீராசாமி பொலிசில் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...