இளைஞர் தற்கொலை வழக்கில் வெளிச்சத்திற்கு வந்த கொடூரம்: சொல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி

Report Print Vijay Amburore in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கர்ப்பிணி பெண் ஒருவர் கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இளைஞரின் செல்போன் அழைப்புகளை வைத்து பெண் ஒருவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றினை கூறியுள்ளார்.

ஜூலை மாதம் 13ம் திகதியன்று கர்ப்பிணியாக இருந்த அந்த பெண், தற்கொலை செய்துகொண்ட இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென ஆயுதங்களுடன் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், இளைஞரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே சுயநினைவிழந்து தரையில் சரிந்தார். உடனே அந்த கர்ப்பிணியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளனர். பின்னர் தன்னுடைய நண்பர்களை வரவழைத்து மீண்டும் அதேகொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பெண்ணின் கரு கலைந்துள்ளது.

இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிடும் என கருதிய அந்த பெண் மூடிமறைத்துள்ளார். இதற்கிடையில் காதலியை காப்பாற்ற முடியாத காரணத்தால் விரக்தியில் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், சுனில் சர்போட்டா, விகாஸ், நரேஷ் குர்ஜார், விஜய் மற்றும் ஜிதேந்திர சர்போட்டா ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...