வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகை ஜெனிலியா கொடுத்த நிதியுதவி எவ்வளவு தெரியுமா?

Report Print Vijay Amburore in இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகை ஜெனிலியா தன்னுடைய கணவருடன் சேர்ந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாநிலங்களிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 3.78 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 432 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாலிவுட் நடிகரும், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரித்தேஷ் தேஷ்முக் தனது மனைவி ஜெனிலியாவுடன் இன்று மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தம்பதியினர் இருவருக்கும் தன்னுடைய நன்றியினை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்