பொலிஸ் சகோதரருடன் துப்பாக்கிச் சண்டை நடத்திய மாவோயிஸ்ட் தங்கை..!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான சண்டையில், பொலிஸ் அண்ணனும், மாவோயிஸ்ட் தங்கையும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சத்திஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில் மாவோயிஸ்ட்டுகளுடன் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது காவலர் வெட்டி ராமா என்பவருக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியவர், அவரது தங்கை வெட்டி கன்னி.

இவர்கள் இருவருமே மாவோயிஸ்ட்டுகளாக சத்திஸ்கரில் போராடி வந்த நிலையில், தன் மனதில் ஏற்பட்ட மாற்றத்தால் வெட்டி ராமா அங்கிருந்து வெளியேறியுள்ளார். அதன் பின்னர் காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

அத்துடன் மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து பிரிந்து வருமாறு வெட்டி கன்னிக்கு பலமுறை வெட்டி ராமா கடிதம் எழுதியுள்ளார். எனினும் அவரது பேச்சைக் கேட்காமல் வெட்டி கன்னி தொடர்ந்து மாவோயிஸ்ட்டாகவே போராடி வருகிறார்.

இந்நிலையில் தான் தனது தங்கைக்கு எதிராகவே அவர் சண்டையிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் இரண்டு மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட நிலையில், வெட்டி ராமாவின் தங்கை துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...