காஷ்மீர் விவகாரம்: ரஜினி, மோடிக்கு எதிர்ப்பு..! நடிகர் விஜய் சேதுபதி அதிரடி கருத்து

Report Print Basu in இந்தியா

காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என பிரபல நடிகர் விஜய் சேதுபதி விமர்சித்துள்ளார்.

அவுஸ்திரேலியா, மெல்போர்னில் நடைபெறும் இந்திய திரைப்படவிழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துக்கொண்டார். இவ்விழாவில் அவருக்கு சிறந்த நடிகர் விருது சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் அவருடைய நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி கூறியதாவது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார்.

அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. அண்டை வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மிகுந்த மன வருத்தம் தருகிறது எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், சட்டப்பிரிவை ரத்து செய்ததற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாராட்டினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்