மோடி, அமித்ஷா இப்படிபட்டவர்கள் தான்..! காஷ்மீர் விவகாரம் குறித்த நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

Report Print Basu in இந்தியா

சென்னையில் நடந்த புத்தக விழாவில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்துக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஜவடேகர் , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியல் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் ரஜினகாந்த், வெங்கையா நாயுடு தப்பித் தவறி அரசியவாதியாக ஆகிவிட்டார், அவர் முழுமையான ஆன்மீகவாதி. அவர் எப்பொழுதும் ஏழை மக்கள், நாட்டை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார் என புகழாரம் சூட்டினார்.

மேலும் பேசிய ரஜினி, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பாராட்டு தெரவிக்கிறேன். நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. அமித்ஷா யார் என்று இந்த நாட்டு மக்களுக்கு தெரிந்துள்ளது.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனன் போன்றவர்கள், ஆனால், யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணன் என்பது அவர்களுக்கு தான் தெரியும் என கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்