சென்னையை அழிக்க சதிதிட்டம்..! நாம் தமிழர் சீமான் பரபரப்பு பேட்டி

Report Print Basu in இந்தியா

சென்னையை அழிக்க மிக மோசமான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

தேனியில் பேட்டியளித்த சீமான் கூறியதாவது, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் உட்பட பல நலதிட்டங்களை ஏன் தமிழநாட்டிற்கே மத்திய அரசு கொண்டு வருகிறது. தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு அவ்வளவு அக்கறையா.

காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற பல திட்டங்களுக்கு அனுமதியளித்த முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தற்போது, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் கட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என விமர்சிக்கிறார்.

இதுபோன்று அவர் அமைச்சராக இருக்கும் போது அனுமதி அளித்த பல திட்டங்களை நாங்கள் விமர்சித்தோம். இன்று எதிர்கட்சி உறுப்பினராக இருக்கும் ரமேஷ் இதை எதிர்கிறார்.

இப்போது, காட்டுப்பள்ளியில் 6111 ஏக்கர் கடலை அதானிக்கு அளிக்கப்போவதாக ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார். அப்படி என்றால் சென்னையே அழிகிறது. அந்த கடலில் இருக்கும் பவளப்பாறைகள் உட்பட கடல் வளங்கள் அழிக்கப்படும்.

அங்கிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்விடங்கள் அப்புறப்படுத்தப்படும், வாழ்வாதாரத்தை இழப்பார்கள். 6111 ஏக்கர் கடலுக்குள் என்றால் இது மிகவும் அபாயமானது.

ஏற்கனவே அதானிக்கு ராமநாதபுரத்தில் 5000 ஏக்கர் அளிக்கப்பட்டது. அதில் 20 கிராமத்தை அவர்கள் அழித்துவிட்டனர், ராமநாதபுர மாவட்டமே அழிந்துவிட்டது. இப்போது கடலும் அழிந்துவிடும்.

தனியார் முதலாளி ஏன் துறைமுகம் கட்ட வேண்டும், அரசு ஏன் துறைமுகங்களை கட்ட முன்வருவதில்லை. எனவே, இது முதலாளிகளை வளர்த்தெடுக்கும் அரசாக இருக்கிறது. மக்களை ஏமாற்ற ஜனநாயகம், குடியரசு, மக்களாட்சி என பல ஆயிரம் கோடிகள் கொட்டி தேர்தல் நடத்தப்படுகிறது என சீமான் கொந்தளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்