லட்சக்கணக்கில் சம்பளம்.. கூகுள் வேலையை உதறித்தள்ளிய தமிழக இளைஞரின் நெகிழ்ச்சி செயல்

Report Print Vijay Amburore in இந்தியா

லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்த கூகுள் வேலையை உதறித்தள்ளி விட்டு சமூகசேவையில் ஈடுபட்டு வரும் தமிழக இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி (32) என்கிற இளைஞர் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.

நீர்நிலை ஆதாரங்கள் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை பார்த்து கவலையடைந்த அருண், அதனை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

அதற்காக தான் பார்த்து வந்த வேலையை உதறித்தள்ளி விட்டு 2007-ம் ஆண்டு Envorinmentalists Foundation of India (EFI) என்கிற தன்னார்வ அமைப்பை நிறுவினார். அதன்மூலம் தற்போது வரை இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களின் 93 ஏரி மற்றும் குளங்களை சுத்தம் இவரது குழுவினர் சுத்தம் செய்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் இவர்கள் செய்து வரும் சேவைக்கு ஸ்ரீராம் குழுமம், முருகப்பா குழுமம் போன்ற தனியார் நிறுவனங்களும் உதவி செய்கின்றன.

இதுமட்டுமின்றி வார இறுதி நாட்களில் சைக்கிளில் சில இடங்களுக்கு பயணம் செய்து சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்