வெள்ளத்தில் வீட்டிற்குள் அடித்துச்செல்லப்பட்ட மலைப்பாம்பு

Report Print Vijay Amburore in இந்தியா

கோவை மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டு சுற்றியுள்ள கிராமங்களில் மழைநீர் புகுந்துள்ளது.

இந்த நிலையில் தெம்பிலிபாளையம் என்னும் மலை கிராமத்திலுள்ள ராஜ் என்பவரது வீட்டில், வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட 15 அடி நீல மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ் குடும்பத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், அந்த மலைபாம்பை பிடித்து அருகாமையில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்