மனைவியை பிரிந்து 7 ஆண்டுகளாக வாழும் கணவர்! திடீரென பிறந்த குழந்தை.. அதிரவைத்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருச்செங்கோட்டை அடுத்த மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் சாரதி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 7 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த சூழலில் குமார் யாருக்கும் தெரியாமல் லதா என்பவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை அறிந்த சாரதி தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக குமார் உள்பட 4 பேர் மீது திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் குமாரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள லதா உள்பட 4 பேரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...