குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்திய கணவன் ஆற்றில் சடலமாக மீட்பு..! குற்றவாளி?

Report Print Abisha in இந்தியா

மனைவியை அடித்து துன்புறுத்திய நபர் ஒருவர் ஆற்றில் சடலமாக மீட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் நாகூர் வெட்டாற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக நாகூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் எதும் துப்புக்கிடைக்கவில்லை. அப்போது சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரின் கைப்பேசி ஒன்றை கைப்பற்றி விசாரணையை துரிதப்படுத்தினர்.

விசாரணையில் உயிரிழந்த நபர் திருவாரூர் மாவட்டம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த மகேந்திரன் என்பதும், அவரது மைத்துனர் கார்த்திக் என்பவருடன் காரைக்காலுக்கு மது அருந்ததும் வந்ததும் தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் திருவாரூர் அடுத்துள்ள கீழ கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கை கைது செய்து அவரிடம் விசாரணை கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரனை குறித்து பொலிசார் தெரிவிக்கையில், கார்த்திக்கின் அக்காவை மகேந்திரன் திருமணம் செய்திருக்கிறார். ஒரு வார காலமாக கார்த்திக்கின் அக்காவை மகேந்திரன் குடித்துவிட்டு வந்து அடித்து கொடுமை படுத்தியிருக்கிறார். இதனால் கோபமடைந்த கார்த்திக் தனது மைத்துனர் மகேந்திரனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு காரைக்கால் அழைத்து வந்து, மது வாங்கிக் கொடுத்து நாகூர் வெட்டாற்று கரையில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசியதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்