பிள்ளைகள் அனாதையாகலாம்.... காதல் மனைவியுடன் மக்களையும் கொன்ற இளைஞர்: பகீர் காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த கணவன், மனைவியையும் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் ஐதராபாத் நகர் அருகாமையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. 32 வயதான குரு பிரவீண் குமார் என்ற இளைஞர் தமது மனைவி சாந்தினி(28) மற்றும் பிரவீண்(9), கிறிஸ்டி(5) என இரு பிள்ளைகளையும் கொன்ற பின்னர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

விவாகரத்துக்கு பின்னர் மகனுடன் தனியாக வசித்து வந்த சாந்தினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் குரு பிரவீண் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். ஆனால் சில ஆண்டுகளாக சாந்தினிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக பிரவீண் சந்தேகம் கொண்டுள்ளார்.

இதனையடுத்து சாந்தினியுடன் தொடர்ந்து கடும் வாக்குவாதத்திலும் பிரவீண் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு மது போதையில் குடியிருப்புக்கு திரும்பிய பிரவீண், சாந்தினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் இரும்பு கம்பியால் சாந்தினியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் சுருண்டு விழுந்த சாந்தினி, சம்பவயிடத்தில் மரணமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தாமும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும், ஆனால் பிள்ளைகள் இருவரும் அனாதைகளாவார்கள் என்ற சந்தேகத்தால் அவர்களையும் கொலை செய்ததாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

கொலை செய்த பின்னர் பிரவீண் நேரடியாக காவல் நிலையம் சென்று நடந்ததை கூறி சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்