இரவில் தனியாக விட்டுச்சென்ற கணவன்: அதிகாலை மகளுடன் இறந்து கிடந்த மனைவி

Report Print Vijay Amburore in இந்தியா

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 7 வயது மகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஜோதி என்கிற 28 வயது பெண் மொடலாக இருந்து வருகிறார். இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன் பங்கஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஷபுனா என்கிற மகள் இருந்தார்.

கடந்த சில தினங்களாகவே பங்கஜ், தன்னுடைய மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் ஜோதி பெரும் மனவேதனையடைந்துள்ளார்.

நேற்று இரவும் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பங்கஜ் வீட்டிலிருந்த நள்ளிரவில் வெளியேறியுள்ளார்.

மறுநாள் காலை விடிந்ததும் ஜோதி கணவருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது. உடனே தன்னுடைய 7 வயது மகளுடன் 20வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் அவருடைய கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers