ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அலங்கோலமான நிலையில் சடலமாக கிடந்த கர்ப்பிணி பெண்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கர்ப்பணி பெண்ணொருவர் அலங்கோலமான நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் அஜ்ஜிலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நினவந்த சரிதா (22). இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்த சரிதா கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனார்.

இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் சரிதாவை தேடி வந்தனர்.

இந்த சூழலில் நேற்று ஊருக்கு வெளிபுறத்தில் உள்ள தனிமையான இடத்தில் சரிதா அலங்கோலமான நிலையில் சடலமாக கிடந்தார்.

இதை பார்த்த சிலர் பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சரிதா கணவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் மீது புகார் கொடுக்க சரிதா குடும்பத்தார் தயக்கம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers