கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கிடந்த சிறுவன்: அலறியடித்து ஓடிய மாணவர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

அரசு விடுதியில் 8 வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இயங்கி வரும் பின்தங்கிய வகுப்பினருக்கான அரசு விடுதியில் தாசரி ஆதித்யா என்கிற 8 வயது சிறுவனும் அவனுடைய அண்ணனும் தங்கி படித்து வந்தனர்.

தாசரி ஆதித்யா 3ம் வகுப்பும், அவனுடைய அண்ணன் 4ம் வகுப்பும் படித்து வந்தனர். விடுதியில் இருவரும் ஒரே அறையில் தான் படுத்துறங்குவார்கள்.

தாசரி ஆதித்யா நேற்று இரவு அறைக்கு உறங்க வரவில்லை. பக்கத்துக்கு அறையில் உறங்க சென்றிருப்பான் என நினைத்துக்கொண்டு அவனுடைய அண்ணனும் வெளியில் எங்கும் தேடாமல் அன்று இரவு உறங்க சென்றுவிட்டான்.

இந்த நிலையில் இன்று காலை விடுதியில் இருந்த மற்ற மாணவர்கள் குளிப்பதற்காக பாத்ரூமிற்கு சென்றுள்ளனர். அங்கு கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு, தாசரி ஆதித்யா ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அலறியடித்துக்கொண்டு ஓடிவந்துள்ளனர்.

சம்பவம் அறிந்து வந்த விடுதி பாதுகாப்பாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவர்கள் மற்றும் விடுதி பாதுகாப்பாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளின் கூற்றுப்படி, மாணவரின் குடும்பத்தினர் கிராமத்தில் சிலருடன் தகராறு செய்திருந்ததால், இந்த கொலை பழிவாங்கும் செயலாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்