அவள் வீட்டுக்கு பணக்காரர்கள் வருவார்கள்.. குளியலறையில் கொட்டிய ரத்தம்.. அதிரவைத்த பெண்ணின் மறுபக்கம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வடமாநில பெண்ணின் வாழ்க்கையில் உள்ள கருப்பு பக்கங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்ணா நகரில் உள்ள பங்களாவில் வசித்து வந்தவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பிங்கி.

டாட்டூ ஆர்டிஸ்டான இவர் குளியலறையில் இறந்து கிடந்த நிலையில் பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சியை வைத்து விகாஷ் சர்மா என்ற வாலிபர் அவர் வீட்டுக்கு வந்தது தெரியவந்தது.

சம்பவத்தன்று விகாஷும், பிங்கியும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர், பின்னர் இருவரும் உல்லாசம் அனுபவித்த நிலையில் பண விடயத்தில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த விகாஷ் பிங்கியை வாஷ்பேக்ஷினில் மோதி விட ரத்தம் கொட்டியது.

இதையடுத்து உன்னைப் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று விகாஷை பிங்கி மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விகாஷ் இனிமேலும் இவர் உயிரோடு இருக்கக்கூடாது என்று கருதி, தலையணையால் அவரின் முகத்தில் அமுக்கி கொன்றுள்ளார்.

இதை விபத்து போல மாற்ற அவரின் சடலத்தை குளியலறைக்குள் இழுத்துச் சென்று தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டுவிட்டு தண்ணீரை திறந்துவிட்டுள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து விகாஷை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிசார் கூறுகையில், திருமணமான பிங்கி கணவரை பிரிந்து அண்ணாநகர் வீட்டில் வசித்து வந்தார்.

இவர், வீட்டிலேயே வசதி படைத்த ஆண்கள், பெண்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு டாட்டூ வரைந்து பணம் சம்பாதித்துவந்துள்ளார்.

இந்தச் சமயத்தில் கிருஷ்ணா என்பவருடன் பிங்கிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா, ஹொட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். கிருஷ்ணாவும் பிங்கியும் ஒரே வீட்டில் கடந்த 6 மாதங்களாகத் தங்கியிருந்தனர்

ஆனால் அவருக்கு இந்த கொலையில் சம்மந்தமில்லை.

பிங்கி இறந்த தகவலை அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்த நிலையில் அவர்கள் சென்னை வந்து சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர்

பிங்கியின் சில பழக்க வழக்கங்களால் அவரின் வாழ்க்கை திசைமாறியுள்ளது. வாடிக்கையாளர்களின் விருப்பப்படி பிங்கி நடந்து கொள்வார்.

ஆடம்பரமாகவும் விருப்பம் போல வாழவும் பிங்கி, தன்னுடைய வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொண்டார்.

கைநிறைய பணம் சம்பாதித்தாலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் குடும்பத்தினர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட சில சம்பவங்களால் பிங்கி நிம்மதியில்லாமல் வாழ்ந்துள்ளார் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers