தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி: கடைசி நேரத்தில் ஹீரோவாக மாறிய நபர்! வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்ற மாணவியை, இளைஞர் ஒருவர் வேகமாக ஓடி சென்று காப்பாற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 25 வயது மாணவி ஒருவர், உளவியல் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்வதற்காக சென்றுள்ளார்.

மதியம் 1.30 மணியளவில் மாணவிக்கும் அவருடைய தாய்க்கும் செல்போனில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவி திடீரென மருத்துவமனையின் முதல் தளத்தில் அமர்ந்துகொண்டு தற்கொலை செய்யப்போவதாக அனைவரையும் மிரட்டியுள்ளார்.

இதனை பார்த்ததும் பதறிப்போன பொதுமக்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். அதே சமயம் 6வது தளத்தில் சென்றுகொண்டிருந்த மஞ்சோத் சிங் சித்து என்கிற இளைஞர் சம்பவத்தை பார்த்து வேகமாக முதல் தளத்திற்கு ஓடிவந்துள்ளார்.

மாணவியிடம் 5 முதல் 10 நிமிடங்கள் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு நெருங்கியுளார். உடனே மாணவி வேகமாக மாடியிலிருந்து குதிக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் துணிந்து செயல்பட்ட மஞ்சோத் சிங், மாணவியின் கையை கச்சிதமாக பிடித்து மேலே இழுத்து காப்பாற்றினார்.

இதனையடுத்து அந்த மாணவி பத்திரமாக அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த பலரும் தற்போது, மஞ்சோத் சிங் செயலை பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்