நள்ளிரவில் விடுதியை விட்டு வெளியேறிய மாணவி போதையில் செய்த செயல்.. அங்கு வந்த இளைஞரால் நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

காதலனுடன் போதையில் இருந்த மாணவியை பொலிஸ் என்று கூறி காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் உள்ள என்ஐடி பொறியியல் கல்லூரியில் தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு விடுதியும் உள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இங்கு தங்கி படித்து வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்தும் வந்துள்ளார்.

நேற்று நள்ளிரவில் விடுதியில் இருந்து வெளியில் வந்த மாணவி காதலனுடன் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த நேரம் பார்த்து ஒரு இளைஞர் வந்தார். இருவரையும் கவனித்தார். இருவருமே கஞ்சா அடித்த போதையில் தங்களை மறந்து இருந்ததை கவனித்தார்.

இதையடுத்து அந்த நபர் இருவரிடமும் நான் பொலிஸ், இங்க என்ன செய்கிறீர்கள் என்று கேட்டு, காதலனை சரமாரியாக தாக்கவும், அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

பின்னர், மாணவியிடம், விடுதியில் விட்டுவிடுகிறேன் என்று சொல்லி கல்லூரிக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். பிறகு அங்கிருந்து தப்பி சென்றும் விட்டார்.

மறுநாள் காலை, அந்த மாணவி பொலிசில் இது இது குறித்து புகாரளித்த நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பொலிஸ் என்று கூறி துஷ்பிரயோகம் செய்த அந்த இளைஞரை பிடித்து விட்டனர்.

விசாரணையில் அவர் பெயர் மணிகண்டன் என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்