பள்ளத்தாக்கில் அப்படியே கவிழ்ந்த பள்ளிப் பேருந்து.. 7 குழந்தைகள் பலியான கோர விபத்து!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளிப் பேருந்து ஒன்று கவிழ்ந்த கோர விபத்தில், 7 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வாலின் கங்சாலி பகுதியில், பள்ளிப் பேருந்து ஒன்று 18 குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தது.

குறித்த பேருந்து பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்த பேரிடர் படை வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது 7 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகி இருந்தனர்.

மேலும் காயமடைந்த மற்ற குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மையம் இச்சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்