இளைஞர்களுடன் உல்லாசம்... அதன் பின்? குளியலறையில் இறந்து கிடந்த பெண் சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சடலமாக குளியலறையில் கிடந்த பெண் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிங்கி (30). கணவரை பிரிந்த இவர், கிருஷ்ணா பகதூர் (26), என்பவருடன் சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் கிருஷ்ணா பகதூர் வெளியே சென்று வீடு திரும்பிய போது, பிங்கி குளியலறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த பொலிசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, கிருஷ்ணா பகதூரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது கழிவறையில் வழக்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூற, பொலிசார் அங்கிருக்கும் சிசிடிவி காமெராவை ஆராய்ந்த போது, பிங்கி வீட்டிற்கு இரண்டு வாலிபர்கள் வந்து சென்றது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி பிங்கியின் போனை ஆராய்ந்து பார்த்த போது, அதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த விகாஷ்சர்மா மற்றும் விகாஷ்குமார் ஆகிய 2 பேர், பிங்கியிடம் பேசியது தெரிந்தது.

பிடித்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கணவரை பிரிந்த பிங்கி, கிருஷ்ணா பகதூர் என்பவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவர், வசதியான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உடலில், டாட்டூ குத்தும் வேலை செய்து வந்துள்ளார்.

அதைத தவிர வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக உயர் ரக புடவைகளை வாங்கி வந்து அதனை விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்துள்ளார்.

இதனால் இவரது வீட்டிற்கு அடிக்கடி வெளி மாநில வாலிபர்கள் வந்து செல்வதும், அவர்களுடன் பிங்கி மது அருந்துவதையும் வழக்கமாக கொண்டிருப்பது

சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த விகாஷ்குமார் மற்றும் விகாஷ் சர்மா ஆகியோருடன் சேர்ந்து பிங்கி மது அருந்தியுள்ளார். அதன் பின் பிங்கியுடன் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அதற்கு பணமும் கொடுத்துள்ளனர். மீண்டும் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளனர். ஆனால், அவர்களிடம் பணம் குறைவாக இருந்ததால் பிங்கி மறுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் பிங்கியை தாக்கி, உல்லாசமாக இருக்க முயன்றுள்ளனர். அப்போது பிங்கி கூச்சலிட்டதால் பயந்து போன அவர்கள், தலையணையால் பிங்கி முகத்தை அமுக்கி உள்ளனர்.

இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு பிங்கி இறந்துவிட்டதால், இதை அப்படியே மாற்றுவதற்காக

பிங்கியின் சடலத்தை குளியலறை எடுத்துச் சென்று, தலையை சுவற்றில் மோதி, வழுக்கி விழுந்தது போல் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்