வருங்கால கணவரை சந்திக்க சென்ற சிறுமி: பொதுக்கழிப்பிடத்தில் சடலமாக மீட்பு

Report Print Vijay Amburore in இந்தியா

மும்பையில் வீட்டிற்கு அருகே உள்ள பொதுக்கழிப்பிடத்தில் 14 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலையில் காரணமாக சாலையில் பூ விற்கும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுமிக்கு குடும்பத்தினர் திருமணம் நிச்சயித்ததாக தெரிகிறது. வருங்கால மாப்பிள்ளையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வருமாறு குடும்பத்தினர் சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அன்று இரவு நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. 2 மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் தேடிப்பார்த்த உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மறுநாள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த பொதுக்கழிப்பிடத்தில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், தூக்கில் சடலமாக தொங்கியது மாயமான சிறுமி தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சிறுமி துஸ்பிரயோகம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பதாக சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், சிறுமியின் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த காரணத்தாலே தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்து, துஸ்பிரயோகித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்