மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி இப்படி ஆயிட்டாரே! வைரலாகும் அவரின் புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலா தேவி இன்று மொட்டை அடித்துகொண்டு நீதிமன்றத்தில் ஆஜரான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

மாணவிகளை செல்போன் மூலம் பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வந்தாலும், வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

அப்படி இரண்டு வாரங்களுக்கு முன்னர் நீதிமன்றத்துக்கு வந்த போது நிர்மலா தேவி திடீரென சாமி ஆடி அருள்வாக்கு கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அடுத்த சில தினங்களில், அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி மனநல மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் இன்று அவர் நீதிமன்றத்துக்கு எப்படி வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக மொட்டை அடித்து வந்திருந்தார்.

எதற்காக நிர்மலாதேவி மொட்டை அடித்து கொண்டு வந்தார் என்று தெரியவில்லை.

ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்தால் மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டி இருந்ததாகவும் அதன்படியே கோவிலில் போய் மொட்டை அடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்