வன்மையாக கண்டிக்கத்தக்கது.. காஷ்மீரை பிரிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது: ஸ்டாலின்

Report Print Kabilan in இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பிரித்ததற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவுகளை ரத்து செய்வதாக உள்துறை அமைச்சர் அறிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இது ஜனநாயக படுகொலை என வைகோ கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

ஜனநாயக படுகொலைக்கு அ.தி.மு.க துணை போயிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இனிமேல் அ.தி.மு.க என்ற பெயரை மாற்றி, அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என வைத்து கொண்டால் நன்றாக இருக்கும்.

காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வரும் வரை குடியரசுத் தலைவர் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்