குளியலறையில் சடலமாக கிடந்த திருமணமான இளம்பெண்.. வெளியில் இருந்து வந்த நபர் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் உள்ள ஒரு வீட்டு குளியலறையில் வடமாநில பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிங்கி (30) இவருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். தொழிலதிபரான பிங்கி அண்ணாநகரில் உள்ள வீட்டில் நல்ல வசதியாக வாழ்ந்து வந்தார், மேலும் டாட்டூ வரைதல் வேலையும் பார்த்து வந்தார்.

பிங்கியுடன் 26 வயசு இளைஞர் ஒருவர் தங்கி இருக்கிறார். இந்நிலையில், வெளியே சென்றிருந்த அந்த இளைஞர், வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, குளியலறையில் பிங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர் பொலிசுக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த பொலிசார் பிங்கியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பிங்கியின் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கமெராவை ஆய்வு செய்த போது 2 பேர் பேர் பிங்கியின் வீட்டுக்குள் சென்று, சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர்கள் யார் என்று பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அதனால் அவர்கள் 2 பேர் மற்றும் பிங்கியின் வீட்டிலேயே தங்கி இருந்த அந்த இளைஞர் என 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.

இதை தவிர பிங்கியின் செல்போனையும் ஆராய்ந்து வருகிறார்கள்.

விசாரணையில் முக்கிய தடயம் ஒன்று சிக்கி உள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்