மீண்டும் ஒரு ஜனநாயகப்படுகொலை: நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசம்!

Report Print Vijay Amburore in இந்தியா

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பது ஒரு ஜனநாயகப்படுகொலை என வைகோ ஆவேசமாக நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக காஷ்மீரில் இந்திய இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பெரும் பதற்றம் நீடித்து வந்த நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370வது மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கு குலாம்நபி ஆசாத், திருச்சி சிவா, வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டிருப்பது மீண்டும் நெருக்கடி நிலையை உருவாக்கியிருப்பதாகவும், ஜனநாயக படுகொலை எனவும் கடுமையாக தன்னுடைய எதிர்ப்பினை பதிவு செய்தார்.

அதேசமயம் வீட்டுசிறையில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இந்திய ஜனநாயகத்திற்கு இது ஒரு கருப்பு தினம்" என பதிவிட்டுள்ளார். மேலும், அரசின் இந்த நடவடிக்கை எதிர்வினைகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்