கணவனை பயமுறுத்த காதல் மனைவி செய்த விபரீத செயல்..! பின்னர் நேர்ந்த பரிதாபம்

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் கணவரை பயமுறுத்த விளையாட்டாக தீக்குளிக்க முயன்ற பெண்ணொருவர், தீயில் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்தவர் அனிதா. இவரும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த தம்பதியர் மதுரவாயல் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், அனிதாவின் தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதன் காரணமாக தனது கணவருடன் தன் தாய் வீட்டிலேயே தங்கியுள்ளார் அனிதா.

இதற்கிடையில், வினோத்குமார் அடிக்கடி குடித்துவிட்டு அனிதாவிடம் சண்டையிட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் கணவரை பயமுறுத்த நினைத்துள்ளார் அனிதா. இதற்காக, தன் மீது எண்ணெய்யை தீக்குளிப்பது போல் அனிதா நடித்துள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அனிதாவின் உடலில் தீப்பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அனிதா, நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்