வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! ஆர்வத்துடன் வாக்குளிக்கும் மக்கள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது, 38 தொகுதிக்கான தேர்தல் நடந்த நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரையில் நடைபெறும்.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்