வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய பிரபலம்.. அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை சீரழித்து விட்டு திருமணம் செய்து கொண்ட அதிமுக பிரமுகரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் திருமுருகன் (37) அ.தி.மு.க பிரமுகர்.

இவர் பிளஸ் 2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடந்த மார்ச் மாதம் வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றார்.

சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இருவரும் வீடு திரும்பினர்.

இந்நிலையில், அந்த சிறுமி கர்ப்பமானார். இதை அறிந்த சிறுமியின் தாய், திருமுருகன் குடும்பத்தினரிடம் நியாயம் கேட்டார்.

இதை அடுத்து சிறுமிக்கும், திருமுருகனுக்கும் கடந்த மாதம் 11ஆம் திகதி அன்று கோவிலில் திருமணம் நடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை அழைத்து வந்து விசாரித்தனர்.

இது தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிந்த பொலிசார் சிறுமியை பலாத்காரம் செய்து திருமணம் செய்த திருமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்