வாட்ஸ் அப்பில் பேசி கொண்டிருந்த அழகான மனைவி.. செல்போனை வாங்கி பார்த்த கணவன் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவி வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ் அப்பில் பேசியதை பார்த்த கணவன் அவரை ஆத்திரத்தில் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவை சேர்ந்தவர் அஞ்சலி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அஞ்சலி சில தினங்களுக்கு முன்னர் தனியாக வாட்ஸ் அப்பில் போன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அவர் கணவர் போனை வாங்கி பார்த்த போது ஆண் ஒருவரின் பெயர் இருந்தது.

இதனால் வேறு ஆணுடன் ஏன் பேசுகிறாய் என கோபப்பட்ட நிலையில் தம்பதிக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆத்திரமடைந்த கணவர் அஞ்சலி வாயில் கொசுவை ஒழிப்பதற்காக வீட்டில் இருந்த மருந்தை எடுத்து ஊற்றிவிட்டு பின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து அஞ்சலி கணவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்