ஓடும் ரயிலில் இருந்து தாய், மகளை கீழே தள்ளிய கும்பல்: பொதுமக்கள் கண்ணெதிரே நடந்த பயங்கரம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பல் ஒன்று ஓடும் ரயிலில் இருந்து தாய் மற்றும் மகளை கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த மனிஷா என்பவர் பொறியியல் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் சேருவதற்காக தனது தாயார் மற்றும் சகோதரனுடன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு ரயிலில் பயணமாகியுள்ளார்.

ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது கொள்ளை கும்பல் ஒன்று உடைமைகளை தூக்கிச்சென்றுள்ளனர்.

இதைக்கண்டதும் மனிஷாவின் தாயார் திருடன் என கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு எழுந்த மனிஷாவும் கொள்ளையர்களுடன் போராடியுள்ளனர்.

இதனிடையே தாயார் மற்றும் மகளை அந்தப்பெட்டியில் நுழைவு வாயிலுக்கு இழுத்துச்சென்ற கொள்ளை கும்பல் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்.

இதைக்கண்ட மனிஷாவின் சகோதரன் உடனடியாக ரயிலில் இருந்த அபாயச் சங்கிலியை இழுந்து ரயிலை நிறுத்த முயன்றுள்ளார்.

ரயில் விருந்தாவன் நிறுத்தத்தை அடைந்தது. இதைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

ரயில் நிறுத்தப்பட்ட காரணத்தை அறிய வந்த ரயில்வே காவலர்களிடம் நடந்த சம்பவத்தை அவர் தெரிவித்தார்.

ரயில்வே காவலர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீனா, மனிஷா இருவரும் கீழே தள்ளிவிடப்பட்ட இடத்துக்கு காவலர்கள் விரைந்தனர்.

ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதால் இருவருக்கும் கடுமையான காயங்கள் இருந்தன.

அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், அந்த கொள்ளை கும்பல் தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்