வெளிநாட்டில் இருந்து ரகசியமாக வந்த நபர்.... யுவதி மீது ஆசிட் தாக்குதல்: அம்பலமான கொடூர பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவில் யுவதி மீது ஆசிட் தாக்குதல் முன்னெடுத்த நபர் வெளிநாட்டில் தப்பியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவதி மீது தாக்குதல் முன்னெடுப்பதற்காகவே அந்த நபர் வெளிநாட்டில் இருந்து கேரளா வந்ததாக முதற்கட்ட விசாரணையில் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

அதேவேளை அமில வீச்சில் படுகாயமடைந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் யுவதி குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இரையான யுவதி வேலைக்கு சென்று குடியிருப்புக்கு திரும்பும் வழியிலேயே அமில வீச்சும், கத்தியால் தாக்குதலும் நடந்துள்ளது.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,

யுவதி மீது தாக்குதல் நடத்தியது அவரது முன்னாள் கணவர் சுபாஷ் என தெரியவந்தது. ஆனால் சுபாஷ் தற்போது குவைத் நாட்டில் வேலையில் உள்ளார்.

தொடர்ந்து நடந்த விசாரணையிலேயே, சுபாஷ் தமது முன்னாள் மனைவியை தாக்குவதற்காகவே குவைத்தில் இருந்து இந்தியா வந்தது அம்பலமானது.

மட்டுமின்றி, தாக்குதலுக்கு பின்னர் அதே நாளில் அவர் குவைத் சென்றுவிட்டதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சுபாஷ் கேரளாவில் சென்ற தகவல் அவரது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.

சுபாஷ் மற்றும் அந்த யுவதியுடனான விவாகரத்து ஏற்பட்டு ஆறு மாதம் கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் சுபாஷ் தொடர்ந்து யுவதியை மொபைலில் அழைத்து மிரட்டல் விடுத்து வந்துள்ளதாக உறவினர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அமில வீச்சில் நூலிழையில் தப்பிய யுவதியை அந்த நபர் கத்தியாலும் தாக்கியுள்ளார். தற்போது அவர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்