6-வது மாடியிலிருந்து குதித்த 18 வயது இளம்பெண்

Report Print Vijay Amburore in இந்தியா

மும்பையில் தந்தை திட்டியதால் 18 வயது இளம்பெண் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த ஆரத்தி தபசே என்கிற 18 வயது இளம்பெண் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று ஆரத்தி தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த அவருடைய தந்தை திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட ஆரத்தி குடியிருக்கும் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பலத்த காயமடைந்த அவரை பக்கத்து வீட்டை சேர்ந்த நபர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த காட்சியானது எதிரில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. இதனை கைப்பற்றி தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்