மகிழ்ச்சியான செய்திக்காக காத்திருந்த கணவன்.. இரத்தபோக்கு ஏற்பட்டு உயிரிழந்த மனைவி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் சென்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. இவர் கட்டிட வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் காந்தி தனது மனைவி ஜோதியை முதல் பிரசவத்திற்குகாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஜோதியின் குழந்தை கருவில் இருந்தபோது ஆரோக்கியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தை நன்றாக பிறக்கும் செய்தியை கேட்க காந்தி ஆவலோடு காத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை ஜோதிக்கு பெண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.

இதனால் ஜோதியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து மீளாத நிலையில், ஜோதிக்கு நேற்று இரவு ரத்தப் போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சிகிச்சை பலனின்றி ஜோதியும் உயிரிழந்துள்ளார்.

தாய் மற்றும் குழந்தை இறந்ததற்கு மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம் என ஜோதியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

மேலும் இருவரின் உயிரிழப்பிற்கு மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். முறையாக சிகிச்சை மேற்கொள்ளாத மருத்தவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்