மது போதையில் வகுப்பறையிலேயே ஆசிரியர் செய்த காரியம்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆசிரியர் ஒருவர் மது போதையில் வகுப்பறையிலேயே மயங்கி கிடந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் சந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு, மது பழக்கத்தினால் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்ததால் வட்டாரக் கல்வி அலுவலரால் எச்சரிக்கப்பட்டார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னரும் பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார் செல்வம். இந்நிலையில், கடந்த வியாழன் அன்று பள்ளிக்கு சென்ற அவர், மது அருந்திவிட்டு போதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தியதில், அவர் மீதான புகார் உண்மை என்று தெரிய வந்தது. இந்நிலையில், அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்