நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நகைக்கடை அதிபரின் மனைவி தீக்குளித்து தற்கொலை... வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

சீமானின் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நகைகடை அதிபரின் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் திருப்பரங்குன்றம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் நகைகடை அதிபர் வண்டாரி தமிழ்மணி.

இவரின் மனைவி ஜான்சி ராணி குடும்ப பிரச்சனை காரணமாக சில தினங்களுக்கு முன்பு தீக்குளித்தார்.

இதையடுத்து பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய ஜான்ஸி ராணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 2-ம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்