ஒரு வருடத்துக்கு பின்னர் மனைவியை சந்தித்த கணவன்.. அப்போது அவருக்கு தெரியவந்த ரகசியத்தால் நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மனைவியின் தவறான நடவடிக்கையை கண்டுபிடித்த கணவன் மனமுடைந்து விடுதியில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லை சேர்ந்தவர் ராஜா (39). லொரி ஓட்டுனர். இவரது மனைவி ஜானகி (29). காதல் திருமணம் செய்த இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1 வருடத்துக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவியை பிரிந்த ராஜா பவானியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் இவர்களது உறவினர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சேர்ந்து வாழ வைக்க முடிவு செய்தனர். பேச்சுவார்த்தை நடந்தபோது ராஜா திருப்பூர் வந்து மனைவியிடம் பேசினார்.

அப்போது ஜானகிக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு வாலிபருக்கும் இடையே தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த ராஜா அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து விரக்தியடைந்த அவர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார்.

நேற்று வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் மூலம் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கினார். இது குறித்து ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்

பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று ராஜாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்